ADDED : மார் 12, 2020 02:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பணம், பதவி இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும்.
* கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள்.
* விருந்தினர் வீட்டில் நுழைந்தால் மனம் கோணாமல் மகிழ்ச்சி அடையுங்கள்.
* உணவுப் பொருட்களை பதுக்காமல் மக்களின் தேவைக்கு விற்பனை செய்யுங்கள்.
- பொன்மொழிகள்