ADDED : ஜூலை 31, 2021 01:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எண்ணத்தின் அடிப்படையில் செயல்கள் அமையும்.
* இடது கையால் எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.
* பிறர் துன்பப்படுவதை பார்த்து சிரிக்காதீர்கள்.
* தண்ணீர், நெருப்பு, நிலம் அனைவருக்கும் பொதுவானது.
* பொய் சாட்சி கூறுவது பெரும்பாவம்.
* இறைவனை தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்யக்கூடாது.
* நேர்வழியை பின்பற்றுபவர்கள் பயப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள்.
* யாரிடமும் அருவெறுப்பு கொள்ளாதே.
* தர்மத்தை ரகசியமாக செய். * யாரிடமும் தவறாக பேசாதீர்.
* கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுங்கள்.
* கோபப்படும்படியான செயல்கள் நடக்கும்போது மவுனமாக இருங்கள்.
* பொய்பேசுபவர் நோன்பு இருந்தால் அதற்கான பலன் கிடைக்காது.
* உள்ளத்தை உறுத்தும் செயலை செய்யாதீர்கள்.
* தர்மம் செய்தால் செல்வம் குறையாது.
- பொன்மொழிகள்

