/
ஆன்மிகம்
/
இஸ்லாம்
/
கட்டுரைகள்
/
நெருங்குகிறதா உலகத்தின் கடைசிநாள்?
/
நெருங்குகிறதா உலகத்தின் கடைசிநாள்?
ADDED : ஜூன் 23, 2015 12:03 PM
பூமிக்கு முதன் முதலாக சொர்க்கத்தில் இருந்து இறைவனால் ஆதம் (அலை) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர் ஒரு வெள்ளிக்கிழமையன்று படைக்கப்பட்டார். சூரியன் உதிக்கும் நாட்களில் மிகச்சிறந்த நாள் வெள்ளி. அந்தநாளில், முதல் மனிதர் பூமிக்கு அனுப்பப்பட்டது போல, உலகத்தின் கியாமநாளும் (இறுதிநாள்) வெள்ளிக்கிழமையாகவே அமையும் என்கிறார் நபிகள் நாயகம்.
கியாமநாள் எப்போது வரும் என்பதற்கான அறிகுறிகளையும் அவர் சொல்லியுள்ளார்.
* தகுதியற்றவர்களிடம் நல்ல காரியங்கள் ஒப்படைக்கப்பட்டால், கியாமநாளை எதிர்பாருங்கள்.
* ஒரு வேலைக்காரப் பெண், தனது எஜமானன் மூலம் குழந்தை பெற்றால் கியாமநாளை எதிர் பாருங்கள். (ஒழுக்கம் சிதைந்து போகும் காலம்).
* கல்வி அறிவு இல்லாத காலம், அறியாமை தலை விரித்தாடும் காலம், மதுபானம் அருந்தப்படும் காலம், விபச்சாரம் பரவலாக நடக்கும் காலம் ஆகியவையும் கியாமநாளின் அறிகுறிகளே.
* உண்மையாளர்களை பொய்யர்கள் என்றும், பொய்யர்களை உண்மையாளர்களென்றும் கணிக்கும் காலமும் கியாமநாளுக்கு அறிகுறியே.
* கடைத்தெருவில் வியாபாரம் மந்தமாக இருக்கும் காலமும், விபச்சாரக் குழந்தைகள் பெருகும் காலமும், ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் பேசும் காலமும் கியாமநாளின் அறிகுறிகள் தான்.
இந்த அறிகுறிகளைக் கொண்டு, இந்த பூமி இறுதிகாலத்தை நெருங்கி விட்டதா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்.