ADDED : மார் 27, 2021 04:38 PM
படித்தால் மட்டும் போதாது. அந்த படிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என குர்ஆன் சொல்வதைக் கேளுங்கள்.
* கற்றுக் கொடுப்பவரும், கற்றுக் கொள்பவரும் நேர்மையுடன் நடக்க வேண்டும். இதை பின்பற்றாதவர்கள் தீமைக்கு ஆளாவர்.
* கல்வி கற்பதை விட்டு விடுவதும், பணம் சேர்ப்பதில் முழு நேரத்தைச் செலவு செய்வதும் மனிதனை நாசப்படுத்தும்.
* கல்விக்காக தன் உயிரை விட்டவர் மரணிப்பதில்லை. கல்வி கற்றுத் தந்தவர் மரணித்த பின்னும், அவரது நற்செயலுக்கான கூலி அவருக்கு வழங்கப்படும்.
* கல்வியில் ஒரு சந்தேகம் ஏற்பட்டால் அதுபற்றி தெரிந்தவரிடம் கேட்கலாம். அவர் அதைச் சொல்ல மறுத்தாலோ, மறைத்தாலோ, மறுமை நாளில் நெருப்பால் ஆன கடிவாளத்தைக் கொண்டு கண்கள் மறைக்கப்படும்.
* மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் நோக்கத்திற்காக மட்டும் ஒருவன் கல்வி கற்பானாயின், அவனை இறைவன் நரகத்தில் நுழையச் செய்வான்.
* ஒருவன் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால், அந்தப் பாதை சொர்க்கப்பாதையாக மாறும்.

