தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/உயர்ந்த நான்கு விஷயங்கள்

உயர்ந்த நான்கு விஷயங்கள்

உயர்ந்த நான்கு விஷயங்கள்


ADDED : அக் 22, 2010 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2010 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணலார் நாயகம் அவர்கள்  உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ''யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத 'துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல்  தேடுகிறேன்,'' என்கிறார்கள்.

எவ்வளவு அரிய பிரார்த்தனை பாருங்கள். இறைவனிடம் அவர்கள் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. பட்டப்படிப்பு படித்தும் உழைக்காமல் இருந்து என்ன பயன்? தாய், மனைவி, மக்களைக் காப்பாற்றத்தானே படிப்பு! 'குடிக்காதே' என பள்ளியிலும், மார்க்க ரீதியாகவும் கற்றுத் தந்திருந்தும், சம்பாதிப்பதையெல்லாம் குடித்து அழிக்கும் பட்டதாரியால் யாருக்கு என்ன லாபம்? எனவே பயனற்ற கல்வி  வேண்டாம் என்கிறார்கள்.

அடுத்து இறைவனுக்கு பயந்து நடக்கும் இதயம் வேண்டும் என்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களே நாட்டில் அதிகம். இறைவனிடம் பயமிருந்தால் மது, சூது, கொலை, கொள்ளை ஆகிய பாதகங்கள் இந்தப் பூமியில் நடக்க வாய்ப்பே இல்லை. கடைசி வரை வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில், இறையச்சம் அறவே இன்றி ஆட்டம்போடும் உலகத்தைச் சிந்திக்கச் செய்யவே, அண்ணலார் நாயகம் அவர்கள், இறைவனிடம் இவ்வாறு வேண்டுகிறார்கள். 'எதையும் போதுமாக்கிக் கொள்ளாத <உள்ளம்' பற்றி அண்ணலார் அவர்கள் பேசுகிறார்கள். உலகத்துன்பங்களுக்கு காரணம் ஆசை. மனிதன் மாடிமேல் மாடிகட்டி கோடி கோடியாய் சேர்த்த பிறகும் கூட ஆசை அடங்கவில்லை. தனக்கு தேவையற்றதைக் கூட பிறருக்குக் கொடுக்க மனமில்லை. இறுதிவரை பொருளாசை கொண்டே இறந்து போகிறான். ஒரு பணம் கூட அவனோடு போவதில்லை எனத்தெரிந்தும் இவ்வாறு செய்கிறான். மனைவி மக்களுக்காக ஒருவன்  உழைக்க வேண்டியது அவசியமே என்றாலும் தர்மமும் முக்கியம். தேவையற்ற செலவுகளை விட்டாலே இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விடலாம். ஏற்கப்படாத 'துஆ' பற்றியும் பார்க்கலாம். ''எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ வேண்டுவதை விட்டு விட்டு, குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுவாரோ, அவருக்கு என்னிடம் கையேந்தி 'துஆ' கேட்பவருக்கு அளிப்பதை விட மேலானதாகக் கொடுத்தருள்வேன்,'' என்கிறான் இறைவன்.  அது மட்டுமல்ல! ''மறைவாக இருக்கும் ஒருவருக்கு மறைவாக இருக்கும் ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று இறைவனால் ஒப்புக்கொள்ளக்கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் இல்லை,'' என்றும் அவன் கூறுகிறான். அதாவது நாம் செய்கின்ற உதவி பிறருக்குத் தெரியவே வேண்டாம். அடுத்தவர்களுக்காக நாம் அவர்களே அறியாமல் செய்யும் பிரார்த்தனையே உயர்ந்தது. உயர்ந்த நான்கு விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us