sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

தினமும் சிந்தியுங்கள்

/

தினமும் சிந்தியுங்கள்

தினமும் சிந்தியுங்கள்

தினமும் சிந்தியுங்கள்


ADDED : செப் 15, 2017 01:45 PM

Google News

ADDED : செப் 15, 2017 01:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் சிந்திக்க வேண்டியது பற்றி சொல்கிறார் நபிகள் நாயகம்.

* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.

* செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றி சிந்தியுங்கள்.

* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.

* உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களை கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்து விடும்.

* உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது, இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.

* அன்பு செலுத்தாதவன், அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன்.

* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக.

* உங்களை நம்பி ஒரு செய்தியைச் சொன்னால், அதை பாதுகாத்து வையுங்கள்.

* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புபவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.

* ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தல் ஆகும்.

* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான்.






      Dinamalar
      Follow us