தனித்தோ, கூட்டமாகவோ செய்யும் பயிற்சி தொழுகை. மனதை பண்படுத்தி, எண்ணத்தை சிதற விடாமல், ஒழுக்கத்துடன் இது வாழச் செய்கிறது. புனித சொற்களை சொல்வதால் அதற்குரிய நன்மை கிடைக்கிறது.
தொழுகையில், 'சுப்ஹான ரப்பியல் அஃலா சுப்ஹான ரப்பியல் அழீம், சுப்ஹானல்லாஹ்' எனச் சொல்வதால் உள்ளம் துாய்மை பெறுகிறது. இனிமையற்ற கசப்பான சொற்கள், செயல்களில் இருந்து மனிதனை விலகச் செய்கிறது.
'இன்னஸ் ஸலாத தன்ஹா அனில் பஹ்ஷாயி வல்முன்கரி' எனச் சொல்வதால் பாவச் செயல்களில் இருந்து காப்பாற்றுகிறது. ஐந்து வேளை தொழுவதன் மூலம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
தொழுகையைப் பற்றிய பாடலில் கவிஞர் ஒருவர்,
எத்தனையோ இன்பங்கள் தருகின்றானே
இவ்வுலகில் அவையெல்லாம் நமக்குத்தானே
அத்தனையும் பெறுகின்றோம் மகிழ்கின்றோமே
அவனை நாம் சிறுபொழுதும் நினைக்கின்றோமா
முத்தனையீர் எண்ணுங்கள் தொழுகையொன்றே
முதல்வனோடு பேசுகின்ற மொழியேயாகும்
சித்தம்தான் தடுமாற்றம் கொள்ளலாமா?
செய்ந்நன்றி நாம் மறந்து வாழலாமா