நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அப்துல் ரஹ்மான் (ரலி) தன் தோழர்களிடம் தெரிவித்த போது,
''நாங்கள் நுாற்று முப்பது பேர் நபிகள் நாயகத்துடன் இருந்தோம். அப்போது அவர், ''உங்களில் யாரிடமாவது உணவு உள்ளதா'' எனக் கேட்டார். ஒருவர் தன்னிடம் மாவு இருப்பதாக சொன்னார். அதை தண்ணீரில் கரைத்து அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். அந்த நேரத்தில் விற்பனைக்காக ஆடுகளை ஓட்டியபடி வியாபாரி ஒருவர் சென்றார்.
பேரம் பேசி சில ஆடுகளை தானே பணம் கொடுத்து வாங்கினார். அதன்பின் கறி விருந்து சமைக்கப்பட்டது.
அவரே உணவை பரிமாறினார். அனைவரும் வயிறார சாப்பிட்டோம்'' என்றார்.