
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறர் மீது அன்பு செலுத்துவது நல்ல விஷயம். ஆனால் அந்த அன்பு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக குழந்தை இல்லாதவர்கள் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பர். ஆனால் தங்களுக்கென குழந்தை பிறந்து விட்டால், தத்தெடுத்த குழந்தையை புறக்கணிப்பதோ, வெறுப்பதோ கூடாது. இருதரப்பிலும் கடமை உணர்வு அவசியம். அதாவது அனாதை குழந்தையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு வேண்டும். உண்மை தெரிந்தாலும் பெற்றோரை நேசிப்பது குழந்தையின் கடமை.