நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெற்றோர், மனைவி, குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்தாத ஆண்கள் இருக்கின்றனர். ஆனால் நபிகள்நாயகம் என்ன சொல்கிறார் தெரியுமா... ' நான் விரும்பும் முதல் நபர் என் மனைவி' என்கிறார்.
அவர் மக்களிடையே ஒருநாள் உரையாற்றிய போது, ''மனிதன் பொக்கிஷமாக கருத வேண்டியதில் சிறந்ததை உங்களுக்கு அறிவிக்கட்டுமா'' எனக் கேட்டார்.
மக்கள் ஆர்வமுடன் தலையசைத்த போது, ''நல்ல பெண்ணே சிறந்த பொக்கிஷம். அவள் திருமணமானதும் கணவரின் குறிப்பறிந்து நடப்பாள். அன்புக்கட்டளைகளை ஏற்று பின்பற்றுவாள். குடும்பத்தை அக்கறையுடன் பேணுவாள்'' என்றார்.