நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கெட்டவர் என்றால் யார்' என உங்களிடம் கேட்டால், 'பிறர் பணத்தை அபகரிப்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொலைகாரர்கள், மோசடிக்காரர்கள்' என்பீர்கள். ஆனால் நபிகள் நாயகம் இவர்களோடு இன்னும் சிலரையும் சொல்கிறார்.
'சுவைமிக்க பானம் அருந்துபவர்கள், ருசிக்காக உண்பவர்கள், ஆடை அணிவதில் ஆடம்பரம் செய்பவர்கள், அதிகம் பேசுபவர்கள், சுகபோகத்தில் திளைப்பவர்கள்' இவர்களும் கெட்டவர்களே. பலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களை மறந்து விட்டு இஷ்டம் போல வாழ்வது அநியாயம் தானே.
மேலும் அவர், 'உங்களின் பாவங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஆனால் நீங்கள் கடன் வாங்கினால் அவை மன்னிக்கப்படுவதில்லை. எனவே வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் முந்திக் கொள்ளுங்கள்' என்கிறார்.