
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமுதாயத்தில் பலர் பலவீனமாக, நோயுற்றவர்களாக, முதியவர்களாக இருக்கிறார்கள். இவர்களால் அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாது. இவர்களை
யார் வேண்டுமானாலும் புறக்கணிக்கலாம். ஏமாற்றலாம். தீங்கு செய்யலாம். பொருள், பணத்திற்காக எப்போது வேண்டுமானாலும் இவர்கள் தாக்குதலுக்கு கூட ஆளாகலாம்.
பலவீனம் கொண்ட இவர்களுக்கு ஆறுதலாக இருப்போம். இவர்களுக்கு உதவிகளைச் செய்தால் இறைவனின் கருணையை பெறுவீர்கள்.