ADDED : மார் 07, 2025 08:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவனின் கட்டளையை மீறி தீமையான செயல்களில் மக்கள் ஈடுபட்டனர். இதைக் கண்ட வானவர்கள், ''அல்லாஹ்வே... மனிதர்களின் மீதுள்ள கருணையால் எத்தனையோ அருட்கொடைகளை வழங்கி இருக்கிறாய். அப்படி இருந்தும் இவர்கள் உன் கட்டளைக்கு மாறாக பாவச் செயல்களில் ஈடுபடுகிறார்களே... இந்த மனிதர்களை போல நாங்கள் பூமியில் வாழ்வதாக இருந்தால் எந்தக் காலத்திலும் பாவத்தில் ஈடுபட மாட்டோம்'' என வருந்தினர்.
''மனிதர்களிடம் ஆசைகளை ஏற்படுத்தியுள்ளேன். அதனால் தான் நல்லது, கெட்டது என இரண்டிலும் ஈடுபடுகிறார்கள். அதை உங்களிடம் கொடுத்தால் நீங்களும் தீமையில் ஈடுபடுவீர்கள்'' என்றார்.