நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெட்ட செயல்களில் இருந்து விலகி இருப்பதோடு, சேவை நோக்கம் கொண்டவரையே தலைவராக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பணமோ, பட்டமோ, குடும்பப் பின்னணியோ ஒருவரை மதிப்பிடும் அளவுகோல் அல்ல.
மாறாக அவர் தர்மப்படி நடக்கிறார் என்றால் அவரே மக்களில் சிறந்தவர். 'மனிதர்களே! உங்களை ஓர் ஆணில் இருந்தும், பெண்ணில் இருந்தும் படைத்தோம். பிறகு உங்களை மனித சமுதாயங்களாக மாற்றினோம். அவர்களில் இறையச்சம் கொண்டவரே மதிக்கத் தக்கவர்கள்' என்கிறது குர்ஆன்.