
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாவமன்னிப்பையும் இறைதிருப்தியையும் பெறுவதற்கான நிகழ்வுதான் ஹஜ் கடமை. மற்ற கடமைகளை வாழும் இடத்திலேயே நிறைவேற்றி விட முடியும். ஆனால் ஹஜ்ஜை நிறைவேற்ற மெக்கா செல்வது அவசியம். இதனால் பலரும் இளம் வயதிலேயே இதை முடித்து விட வேண்டும் என விரும்புகிறார்கள். இதன் முக்கியத்துவத்தை அறிவோம்.
* ஒருமுறை நபிகள் நாயகத்திடம் சில பெண்கள் போரில் ஈடுபடுவதற்காக அனுமதி கேட்டனர். அதற்கு அவர், 'பெண்கள் போரில் கலந்து கொள்வதற்கு ஈடாக ஹஜ் கடமை உள்ளது' என்றார்.
* ஒருவர் தவறான விஷயங்களை விட்டு விலகி ஹஜ் பயணம் செய்கிறார். இப்பயணம் எல்லாப் பாவங்களையும் போக்கி பிறந்த குழந்தையைப் போல அவரை நல்லவனாக மாற்றும்.
* ஹஜ் பயணத்தை நிறைவேற்றினால் இறை நெருக்கம் ஏற்பட்டு ஒருவரின் பிரார்த்தனை ஏற்கப்படும்.