நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்சியாளரான அபூபக்கர் இறையச்சம் மிகுந்தவர். எளிமை, நேர்மை அவரது இயல்பு. ஆட்சிப் பொறுப்பேற்ற மறுநாளே தான் செய்த துணி வியாபாரத்தை கவனிக்க புறப்பட்டார்.
''அபூபக்கரே! நீங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டால் ஆட்சியை கவனிப்பது யார்?'' எனக் கேட்டார் கலீபாவான உமர்.
''ஆட்சியில் இருந்தாலும் குடும்பத்தை கவனிக்காமல் இருக்க முடியுமா? துணி வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றுவேன்'' என்றார் அபூபக்கர்.
தோழர்களுடன் ஆலோசித்த உமர், அரசு கஜானாவில் இருந்து மாதம் தோறும் குடும்பச் செலவுக்கு பணம் அளிக்கத் தொடங்கினார். ஆனால் அபூபக்கர் தன் இறுதிக்காலத்தில் குடும்பத்திற்காக வாங்கிய தொகையை அரசிடம் திருப்பிச் செலுத்தினார். நேர்மையின் மறுபெயர் இவர் அல்லவா...