நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார் நபிகள்
நாயகம். அப்போது அங்கு வந்த ஒருவர், ''ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை
நாள் பற்றி விளக்கம் தருவீரா'' எனக் கேட்டார்.
* ஈமான் என்பது மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவோம் என்றும், இறைவனை சந்திப்போம் என்றும் நம்புவது.
*
இஸ்லாம் என்பது யாருக்கும் இணை வைக்காமல் அவனை வணங்குவது. தொழுகை
செய்வது. கடமையாக்கப்பட்ட ஸகாத் வழங்குவது. ரம்ஜான் நோன்பு நோற்பது.
*
இஹ்ஸான் என்பது அவனை நேரில் காண்பது போல வணங்குவது. அவனை நாம் பார்க்க
முடியாவிட்டாலும் நிச்சயமாக அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
*
மறுமை நாள் பற்றிய ஞானம் இறைவனிடம் மட்டும் உள்ளது. இதைச் சொல்லி
முடித்ததும் கேட்டவர் அங்கிருந்து மறைந்தார். அப்போது நாயகம், ''இவர்தான்
வானவரான ஜிப்ரீல்'' என்றார்.