
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலர் நல்ல விஷயங்கள் நடக்கும்போது இறைவனை நினைக்க மாட்டார்கள். இதுவே விரும்பாத விஷயம் நடந்தால் போதும். 'என்னை ஏன் சோதிக்கிறாய். நான் எந்த பாவமும் செய்யவில்லையே' என புலம்புவர். இது தவறான செயல்.
எப்போதும் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். துன்பம் வரும் சமயத்தில், 'நான் ஏதேனும் பாவம் செய்திருந்தால் மன்னித்து விடு. இனி தெரிந்தே பாவம் செய்ய மாட்டேன்' என துஆ செய்ய வேண்டும். அதைப் போல் அந்த துன்பத்தை பரிசாக கருதி பொறுமையுடன் இருக்க வேண்டும்.
'அவன் சோதிக்கும் போது பொறுமையுடன் இருப்பவர், பாவ மன்னிப்பு வேண்டுபவர் சுவனத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்'.