
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸூர் என்பது வாயால் ஊதி ஒலி எழுப்பும் கருவி. கியாம நாளில் இறைவன் தன் வசமுள்ள 'ஸூர்' கருவியை ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்படும். அப்போது அழிக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் விசாரணைக் களத்திற்கு செல்வதற்காக உயிருடன் எழுந்திருப்பர். இந்த இரண்டு நிகழ்வுகளையும் 'ஸூர்' என்ற சொல் குறிக்கும்.

