ADDED : செப் 29, 2025 10:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிவாசல் தொழுகையில் முல்லா இருக்கும் போது அங்கிருந்த இருவர் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவன் மற்றொருவனிடம், ''அடடா! என் வீட்டை பூட்டவில்லையே'' என்றான்.
''தொழுகையின் போது பேசியதால் என் பிரார்த்தனை கலைந்து விட்டது'' என்றான் மற்றவன்.
''நீ தொழுகையில் ஆழ்ந்து ஈடுபட்டால் பிரார்த்தனை எப்படி கலையும்'' என்றான் முதலாமவன்.
இதைக் கேட்டதும் முல்லாவுக்கு சிரிப்பு வந்தது.
''ஏன் சிரிக்கிறீர்கள்'' எனக் கேட்டனர்.
''உங்களின் பேச்சே காரணம். பிரார்த்தனையின் போது பேசக்கூடாது. பிறரை குறை சொல்பவனுக்கு தன் குறை தெரியாது'' என்றார் முல்லா. இருவரும் தலைகுனிந்தனர்.