ADDED : நவ 10, 2023 10:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரக நெருப்பைவிட பயங்கரமான ஒன்று இல்லை. ஆனால் அதனை விட்டு வெருண்டோட வேண்டியவன் உறங்குகிறான். சுவனத்தை விட உயர்ந்தது இல்லை. ஆனால் அதனை விரும்பக்கூடியவன் உறங்குகிறான்.
அதாவது பயங்கரமான ஒன்றைப் பார்த்த பிறகு மனிதனுக்கு துாக்கம் பறந்தோடிவிடுகிறது. அதில் இருந்து அவன் வெருண்டோடிவிடுகிறான். இதுபோல் நல்ல பொருளின் மீது நாட்டம் ஏற்பட்டுவிட்டால் அதனை அடையாதவரை ஒருவன் உறங்கமாட்டான். இவ்வாறு உள்ளபோது சுவனத்தை அடைய நினைப்பவர்கள் ஏன் உறங்குகிறார்கள். நரகத்தை விட்டுத் தப்பித்து ஓடும் நினைப்பு ஏன் இவர்களுக்கு வருவதில்லை?