நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உமர் (ரலி) வீட்டில் ஆடு அறுக்கப்பட்டது. அப்போது வீட்டுக்கு வந்த அவர், 'பக்கத்து வீட்டு யூதருக்கு இறைச்சி அனுப்பப்பட்டதா' எனக் கேட்டார்.
இதற்கு, 'வந்ததும் வராததுமாக பக்கத்து வீட்டினரை விசாரிக்கிறீர்களே' என குடும்பத்தினர் கேட்டனர்.
அதற்கு அவர், 'இறைத்துாதர் என்னை சந்திக்கும் போதெல்லாம் அண்டை வீட்டாருடன் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என சொல்வார். எந்த அளவுக்கு அவர் இதை வலியுறுத்தினார் என்றால், அண்டை வீட்டாருக்கு நமது சொத்திலும் பங்கு பெறும் உரிமை வந்துவிடுமோ என ஆச்சரியப்படும் அளவிற்கு அழுத்தமாக தெரிவித்தார்' எனக் கூறினார்.
அக்கம் பக்கத்தினருடன் நட்பு, பரிவுடன் நடக்க வேண்டும்.