நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயர்ந்த படைப்புகள் என வானவர்கள் தங்களை நினைத்தனர். அப்போது இறைவன் தன் பிரதிநிதியாக ஒருவரை நியமிக்கப் போகிறேன் என்றான். இதைக் கேட்டதும் அவர்கள், 'பிரதிநிதி என்ற அந்தஸ்து மிக உயர்வானது. உயர்ந்த படைப்பாகிய எங்களில் ஒருவருக்கு தர வேண்டும். வாழும் போதே பல ஜின்களைக் கொன்றான் இப்லீஸ். மீண்டும் பூமியில் படைக்கப்பட்டால் ஜின் வர்க்கத்தினரைப் போல அவர்களும் கலகம் செய்து ரத்தம் சிந்துவார்களே. அவர்களை எதற்காக படைக்கப் போகிறாய். உன்னை வணங்கவும், துதி செய்யவும் நாங்கள் இருப்பது போதாதா' என முறையிட்டனர்.
'நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நான் நன்கறிவேன்' என பதில் கூறினான்.