ADDED : ஜூன் 14, 2024 01:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் ஹஜ் பெருநாள் அன்று நிகழ்த்திய உரை: யார் தொழுகை செய்த பிறகு குர்பானி கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர். யார் தொழுகைக்கு முன்பே பிராணியை அறுத்து விடுகிறாரோ அவர் தமக்காக அறுத்தவர் ஆவார். அவர் குர்பானி கொடுத்தவர் ஆக மாட்டார். அப்போது அபூபுர்தா என்பவர், ''இன்று விருந்துண்ண ஏற்ற நாள் என
நினைத்து தொழுகைக்கு முன்பே ஆட்டை அறுத்து விட்டேன். காலை உணவாக சாப்பிட்டும் வந்தேன்'' என்றார்.
அதற்கு நாயகம், ''உங்கள் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாக கருதப்படும்'' என்றார்.