
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனஸ் (ரலி) கூறியதாவது: தொழுகை நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என முஸ்லிம்கள் கருதினர். அப்போது சிலர் நெருப்பு மூட்டலாம் என்றும், பலர் மணியடித்து மக்களை கூப்பிடலாம் என்றும் ஆலோசனை கூறினர். ஆனால் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு, 'பாங்கு' (அதான்) என்னும் தொழுகை அறிவிப்பிற்குரிய வாசகங்களை கற்றுத் தந்து அவற்றை இரண்டு முறை சொல்லும் படியும், 'இகாமத்' (தொழுகைக்காக நிற்கும்போது சொல்லும் வாசகங்கள்) ஒரு முறை சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.