ADDED : ஜன 20, 2019 08:13 AM

திருமணம் செய்ய இருப்பவர்களுக்கு நாயகம் அறிவுரை வழங்கியுள்ளார்.
நெருங்கிய உறவில் திருமணம் செய்தால், உடல் பலவீனம் ஏற்படும். அத்துடன் குழந்தைகளும் உடற்குறையுடன் பிறக்க வாய்ப்புண்டு. பொருளுக்காக மட்டும் ஆசைப்பட்டு திருமணம் செய்யாதீர்கள். அது பாவங்கள் செய்வதற்கு துாண்டுகோலாக இருக்கும். இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ள பெண்களைத் திருமணம் செய்தால், வாழ்வு நலமாக இருக்கும்.
திருமணத்தை குறைந்த செலவில் நடத்த வேண்டும். அவற்றை விளம்பரப்படுத்தலாம். பள்ளிவாசல்களில் திருமணம் நடத்தலாம். மஹர்(பணம்) கொடுத்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். பகல் முழுவதும் மனைவியைத் திட்டிவிட்டு, இரவில் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்வது மனிதத்தன்மை அற்ற செயல். தாம்பத்யத்தின் போது பேசுவது கூடாது. பேசினால் குழந்தை ஊமையாகப் பிறக்க வாய்ப்புண்டு. மாதவிலக்கு காலத்தில் உறவு கொண்டால் குழந்தைக்கு குஷ்டரோகம் ஏற்படலாம்.