
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலர் தர்மம் செய்வதற்கு தனது சொத்தில் ஒரு பங்கை எழுதிவைப்பார்கள். அதை பார்க்கும் பலர் நம்மால் இதுமாதிரி செய்ய முடியவில்லையே என ஏக்கம் கொள்வர். இது தவறான விஷயமாகும். யாருக்கு என்ன முடியுமோ அதை செய்தாலே போதும். மனம்தான் முக்கியமே தவிர பொருள் அல்ல.
''எல்லோரும் தர்மம் செய்துதான் ஆக வேண்டுமா'' என நாயகத்திடம் ஒருவர் கேட்டார்.
“நிச்சயம் மனிதனாக பிறந்த அனைவரும் தர்மம் செய்தே தீரவேண்டும். இயலாதவர்கள் ஏதோ ஒருவகையில் பிறருக்கு தொண்டு கூட செய்யலாம். மற்றவர்கள் தர்மம் செய்யும்படி துாண்டுவதும் நற்செயலே'' என விளக்கம் அளித்தார்.
இப்படி செலவில்லாத தர்மத்தை அனைவரும் செய்யலாமே!