ADDED : மே 13, 2022 02:18 PM

நோக்கம் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது. இறைவன் நம்மை மனிதனாக படைத்தது கூட ஒரு நோக்கத்திற்காகத்தான். அது என்ன.. தர்மம். ஆமாம்... பிறருக்கு உதவி செய்வதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இங்கே ஒரு கேள்வி எழக்கூடும். பணம் உள்ளவர்களுக்கு இது சாத்தியம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்று பலரும் நினைக்கக்கூடும். அதற்கும் ஒரு வழி உண்டு. கீழே சொல்லப்பட்டுள்ள செயல்களை செய்தால்போதும் தர்மம் செய்த பலனை அடைந்துவிடலாம்.
* இனிய சொற்களை பேசலாம்.
* இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சமாதானம் செய்யலாம்.
* வயதானவர்களுக்கு வாகன வசதி செய்து தரலாம்.
* நடைபாதையில் கிடக்கும் வீணான பொருட்களை அப்புறப்படுத்தலாம்.
* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கலாம்.
* மற்றவர்கள் நல்ல பாதையில் நடக்க நீங்கள் வழிகாட்டியாக இருக்கலாம்.