ADDED : அக் 29, 2021 04:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்க்கரையும், உப்பும் கலந்து இருக்கும் இடத்தில் எறும்பு புகுந்தால், அது உப்பை தவிர்த்து சர்க்கரையை மட்டுமே எடுத்துச் செல்லும். அதாவது தனக்கு தேவையானதை மட்டும் எடுத்து கொள்கிறது. இதுவே எறும்பின் வாழ்க்கை முறை.
இந்த வாழ்க்கை முறையை எறும்புக்கு யார் சொல்லித் தந்தது என்று யோசிக்கிறீரா... எறும்புக்கு இயற்கை வழங்கிய கொடை அது. இதன்மூலம் இயற்கை நமக்கு ஒரு பாடத்தை சொல்லிக்கொடுக்கிறது. எப்படி என்று கேட்கிறீரா...
நாம் அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். சிலர் நன்கு சம்பாதிக்கலாம், சிலரோ திறமைசாலிகளாக இருப்பர். அது அவரவர் சூழ்நிலையை பொறுத்தது. அதை பார்த்து பொறாமைப்படவோ, வருத்தப்படவோ செய்யாதீர். வாழும் காலமோ கொஞ்சமானது. எனவே இருப்பதை வைத்து திருப்தியாக வாழுங்கள்.