ADDED : ஜூலை 12, 2022 12:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணீருடன் நின்று கொண்டிருந்த ஒட்டகம் ஒன்றை பார்த்தார் நாயகம். அதன் அருகே சென்று அன்போடு தடவிக்கொடுக்க அது அமைதியாக இருந்தது. அங்கு நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி இது யாருடைய ஒட்டகம் என கேட்டார். அவர்களில் ஒருவன் என்னுடையது என்றான். இதற்கு சரியாக உணவு கொடுக்கவில்லை, தொடர்ந்து வேலை வாங்குகிறாய் என வருந்துகிறது. இனி இந்த தவறை செய்யாதே இதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேள் என்றார் நாயகம்.