sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

தண்ணீர்.... தண்ணீர்!

/

தண்ணீர்.... தண்ணீர்!

தண்ணீர்.... தண்ணீர்!

தண்ணீர்.... தண்ணீர்!


ADDED : ஜன 12, 2018 11:40 AM

Google News

ADDED : ஜன 12, 2018 11:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் தண்ணீர் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டுமானால், அதை அரசியலாக்கும் காலம் இது. ஆனால், தண்ணீர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது இறை வழிபாட்டில் மிக முக்கியமானதாகும்.

ஒருவர் இறந்த பிறகு அவர், அல்லாஹ் முன்பு கொண்டு வரப்படுவார். அவரிடம் அல்லாஹ், “ஆதமின் மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு புகட்டவில்லையே,” என்பான்.

அதற்கு அந்த மனிதன், “இறைவா! நீயோ இந்த உலகத்தின் அதிபதியாக இருக்கும் போது நான் உனக்கு எப்படி தண்ணீர் தருவேன்,” என்று புரியாமல் கேட்பான். மேலும், இறைவன் தன்னிடம் தண்ணீர் கேட்டது எப்போது என தெரியாமல் குழம்புவான்.

அப்போது அல்லாஹ், தன்னுடைய அடியார் ஒருவரின் பெயரைச் சொல்லி, “இந்த நபர் இந்த நாளில் இந்த நேரத்தில் உன்னிடம் தண்ணீர் கேட்டார். நீ கொடுக்கவில்லையே,” என ஞாபகப்படுத்துவான்.

அந்த மனிதனுக்கு அந்த நிகழ்வு நினைவுக்கு வரும். அப்போது அல்லாஹ் அவனிடம், “நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால், நீ என்னிடத்தில் அதனைப் பெற்றிருப்பாய்,”என்பான்.

தண்ணீர் கேட்டவர்களுக்கு 'இல்லை' என மறுக்காமல் கொடுத்தால், இறைவன் பெருமழை பெய்வித்து இருதரப்பு பிரச்னையையும் பூர்த்தி செய்வான். இனியேனும் தண்ணீர் பிரச்னையில் மாநிலங்களும், அருகருகே உள்ள ஊர் மக்களும் பகிர்ந்து குடிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us