நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவன் அடியார்களில் சிலர் இறைத்துாதராகவோ, இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ (ஷஹீத்களாகவோ) இருக்கமாட்டார்கள். ஆனால் மறுமைநாளில் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்.
அவர்கள் யார் தெரியுமா?
ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலும், தமக்கு இடையே கொடுக்கல் வாங்கலும் இல்லாமலும் இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்தவர்கள். அவர்களின் முகங்கள் ஒளிவீசும். அவர்களை சுற்றிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் பயப்படும் மறுமை நேரத்தில் அவர்களுக்கு பயம் இருக்காது என்கிறார் நபிகள் நாயகம்.

