ADDED : அக் 27, 2017 09:20 AM

'ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வாழவேண்டும். தேவையற்ற விஷயங்களுக்காக தர்க்கம் செய்யக் கூடாது' என நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
ஒருமுறை, நபிகள் பின்பற்றுவோர் சிலர் ஏதோ ஒரு விஷயமாக விவாதித்தனர். அதில் சண்டை ஏற்பட்டது.
ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வது தான் சரியென வாதிட்டனர். இது நபிகளின் காதில் விழுந்தது.
அவர் “எனது உம்மத்தினர்களாகிய உங்களைப்போன்று தர்க்கம் புரிந்து பிளவுபட்டதால் தான் உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அழிந்தனர். தர்க்கம்
செய்யாதீர்கள். தர்க்கம் புரிபவர்களுக்கு நான் கியாம நாளில் இறைவனிடம் பரிந்துரை செய்ய மாட்டேன்.
சொர்க்கத்தில் பலவகையான செல்வங்கள் இருக்கின்றன. வீண் தர்க்கம் புரிந்து குழப்பங்களை தூண்டிவிடும் அபாக்கியசாலிகள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்,” என்றார்.
சொர்க்கம் வேண்டுமானால், தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது.