sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

பிரபஞ்சத்தின் திறவுகோலாகும் 'சிவ ஷம்போ'

/

பிரபஞ்சத்தின் திறவுகோலாகும் 'சிவ ஷம்போ'

பிரபஞ்சத்தின் திறவுகோலாகும் 'சிவ ஷம்போ'

பிரபஞ்சத்தின் திறவுகோலாகும் 'சிவ ஷம்போ'


PUBLISHED ON : அக் 31, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 31, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சிவ ஷம்போ' எனும் மந்திர உச்சாடனையை தினமும் ஒருமுறையேனும் நாம் உச்சரித்தால் அதன்மூலம் நாம் கிடைக்கப்பெறும் பலன் என்ன என்பது குறித்து சத்குரு பேசுகிறார். பிரபஞ்சத்தின் திறவுகோலாய் மாறும் மந்திர உச்சாடனங்களின் உன்னதத்தை இப்பதிவு உணர்த்துகிறது.

சத்குரு : நவீன விஞ்ஞானத்தில் இந்த முழு பிரபஞ்சமே அதிர்வுகள்தான் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிர்வுகள் இருந்தால், அங்கு சத்தமும் இருக்கும். எனவே இந்த பிரபஞ்சமே சப்தத்தின் கலவையாகும். சப்தங்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலினால், பிரபஞ்சத்தின் திறவுகோலாக சிலவிதமான சப்தங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த சப்தங்களை சரியான நேரத்தில் தகுந்த தீவிரத்தோடு உச்சரித்தால், அது உங்கள் எல்லைகளை எல்லாம் உடைத்து, உங்களை வேறொரு நிலைக்குக் கொண்டு செல்லும்.

சிவா, ஷம்போ,' என்ற சப்தங்களும் இவ்வகையான திறவுகோல்கள்தான். நீங்கள் இதனை உங்களையே உடைக்கவும், பிளக்கவும் பயன்படுத்த வேண்டும். திடத்தன்மையுடைய உங்களைத் திறந்த நிலையாக்கி முற்றிலும் ஒரு புது பரிமாணத்திற்குக் கொண்டு செல்ல இதனைப் பயன்படுத்த வேண்டும்.

சிவா, சிவா, சிவா என்று மலைகளை ஏறுவதற்கு அல்ல. அதற்காக அந்த மந்திரம் உங்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த சப்தங்களை உங்கள் மூச்சுக்காற்றாகவே சுவாசிக்க வேண்டும். அது உங்களுள் எப்போதுமே ஒலித்துக் கொண்டு இருக்கவேண்டும். அதற்கான உகந்த சூழ்நிலை ஏற்பட்டால், அது உங்களைப் பிளந்துவிடும் தன்மையுடையது. அதன்பின், முற்றிலும் புதிய விஷயங்கள் உங்களுக்கு நடக்கத் தொடங்கும்.

அதனால் 'சிவ-ஷம்போ' என்ற மந்திரத்தை, வேறு பயன்பாட்டிற்காக உபயோகிக்கத் தேவை இல்லை. நீங்கள் ஷம்போ என்று சொல்வது, அந்த சப்தத்துடன் நீங்கள் கலந்துவிடுவதற்காக. நீங்கள் ஊட்டியில் ரியல் எஸ்டேட் வாங்கவோ, புது வீடு வாங்கவோ, புது வாகனம் வாங்கவோ, உங்கள் மகளுக்குத் திருமணம் செய்யவோ, இது சொல்வதற்கில்லை. இந்த தேவைகளுக்காக நீங்கள் 'சிவா' என்று சொல்வதில்லை. சிவா என்று சொன்னால், நீங்கள் முக்தியை நாடுகிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், சிவா என்றால், எது இல்லையோ அந்த தன்மை.

அந்த ஒன்றுமில்லாத தன்மையின் ஆனந்தம், ஒன்றுமில்லாத தன்மையின் பேரானந்தம், அது சிவா எனப்படும். நான் என்ற தன்மை உங்களுக்குள் உடைந்தால்தான், உங்களுக்குள் பேரானந்தம் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் ஏதாவது சில கணத்தில், நீங்கள் பேரானந்தத்தை உணர்ந்திருப்பீர்களானால், அது உங்கள் தன்மை சிறிதேனும் உடைந்த அந்த சில கணங்களே. உங்களுக்குள் நீங்களே நிறைந்திருந்தால், உங்களால் எப்போதும் ஆனந்தத்தையும், பேரானந்தத்தையும் சுவைக்க முடியாது.

நம்மை சுற்றியும், நமக்குள்ளும் துடிக்கும் உயிர்த்தன்மையை உணர, அதற்கான சாத்தியத்தை உருவாக்க, தினமும் ஒரே ஒரு முறையாவது, ஒரே ஒரு முறையாவது ஆத்மார்த்தமாக, உங்களுள் இருக்கும் அனைத்தையும் கொண்டு, 'சிவ-ஷம்போ' என்ற மந்திரத்தை உச்சரியுங்கள். இதனை நீங்கள் செய்துபாருங்கள், அது உங்களுக்குள் புதிய சாத்தியங்கள் மலர ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்கும்.

தெய்வீகம் உங்களுக்குள் முளைக்க, இதுபோன்றதொரு சிறு துவாரம் போதும். அதனை நீங்கள் வளர செய்வீர்களானால், நீங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கமாட்டீர்கள்.

ஒவ்வொரு அணுவும் ஒரு வாசல்தான்!






      Dinamalar
      Follow us