PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

'இப்போதைக்கு வாய்ப்பில்லை போலிருக்கிறதே...'என, கவலையில் ஆழ்ந்துள்ளனர், பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்மிருதி இரானியின் ஆதரவாளர்கள்.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம்,அமேதியில், காங்கிரசின்ராகுலை தோற்கடித்தஸ்மிருதி இரானிக்கு,பா.ஜ.,வில் அமோகவரவேற்பு கிடைத்தது.மத்திய பெண்கள் மற்றும்குடும்ப நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
லோக்சபாவில், ராகுல் உள்ளிட்ட காங் கிரஸ்கட்சியினரின் கேள்விகளுக்கு அதிரடியாகபதில் அளித்து அசத்தினார். கட்சியிலும் இவரது செல்வாக்கு அதிகரித்தது.
ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அமேதியில், ராகுலின் ஆதரவாளரிடம் தோல்வி அடைந்தார், ஸ்மிருதி இரானி. இதனால் இவரது செல்வாக்கு சரிந்தது. அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது தலைவர் பதவிக் காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், நட்டாவுக்கு பதிலாக ஸ்மிருதி இரானி கட்சியின் தலைவராக நியமிக்கப்படலாம் என டில்லியில் பேச்சு அடிபட்டது.
ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஸ்மிருதிக்கு இந்த பதவி கிடைக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து, செயல் தலைவர் பதவியாவது கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், ஸ்மிருதி இரானியும், அவரது ஆதரவாளர்களும்.