PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

'ஆளும் கட்சியினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...' என, கோபத்தில் கொந்தளிக்கின்றனர், கர்நாடக பா.ஜ.,வினர்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மற்ற மாநிலங்களை போல் கர்நாடகாவிலும், பா.ஜ., - காங்., இடையே தினமும் அக்கப்போர் நடக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அவர்களுக்கு கடிவாளம் போடுவதற்கு கவர்னர்கள்வாயிலாக பா.ஜ., தொல்லை கொடுப்பதுவழக்கம். ஆனால், கர்நாடக கவர்னர்தாவர்சந்த் கெலாட், துவக்கத்தில் அமைதியாக இருந்தார்.
சமீபத்தில் தான், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க அனுமதி கொடுத்தார். இதையடுத்து, 'காங்., கட்சியினரின்கொட்டம் விரைவில் அடங்கி விடும்' என, பா.ஜ.,வினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், கர்நாடக பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவியை, பெண் அமைச்சர் ஒருவரை ஆபாசமாக பேசிய வழக்கில், சமீபத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், பா.ஜ., -எம்.எல்.ஏ., முனிரத்னா மீது முட்டையை வீசி காங்கிரசார் அவமானப்படுத்தினர். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பா.ஜ.,வினர், 'சித்தராமையா தரப்பினரின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்கு அதிரடியான ஒருவரை கவர்னராக நியமித்தால் தான் சரியாக இருக்கும்...' என, தங்கள் மேலிட தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

