PUBLISHED ON : டிச 01, 2024 12:00 AM

'இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் வைத்து, எப்படி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முடியும்...' எனமுணுமுணுக்கிறார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்.
இம்மாநிலத்தில்உள்ள பதோதி லோக்சபா தொகுதி எம்.பி.,யான, பா.ஜ.,வின் வினோத்குமார் பிண்ட், சமீபத்தில், தன் பண்ணை வீட்டில் மிகப்பெரிய விருந்துக்குஏற்பாடு செய்திருந்தார்.
மாநிலத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்தும், வினோத்குமாரின் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது; வந்திருந்த அனைவருக்கும்பிரியாணி பரிமாற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர், உணவுபரிமாறியவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கைகலப்பும் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பண்ணை வீடு, கலவரக் காடாக மாறி விட்டது; போலீசார் வந்து நிலைமையைசமாளித்தனர்.
இது தொடர்பான செய்தி, காட்டுத் தீயாக மாநிலம்முழுதும் பரவியது. பிரியாணிக்காக கட்சியினர் கட்டிப்புரண்டு சண்டை போட்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.
இந்த விவகாரம், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காதுகளுக்கு எட்டியது. 'ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் சிலர், என்னை கவிழ்க்க நேரம் பார்த்து வருகின்றனர். இந்த லட்சணத்தில் பிரியாணி சண்டை வேறா... என் பெயரை கெடுப்பதற்காகவேஇப்படி செய்கின்றனர்...' என, புலம்பி தள்ளிவிட்டார் யோகி ஆதித்யநாத்.

