PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

'மிகப்பெரிய திட்டத்துடன் இருக்கிறார்; அவ்வளவு எளிதாகக் குறைத்து மதிப்பிடக் கூடாது...' என, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா பற்றி கூறுகின்றனர், கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல், கடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரபிரதேசத்தின் ரேபரேலிதொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார்; இதையடுத்து, வயநாடுஎம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுலின் சகோதரி பிரியங்கா அபார வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கேரள மக்களுக்கும், தனக்கும் நெருக்கம்ஏற்படுத்த அவர் முயற்சித்து வருகிறார். லோக்சபாவில்எம்.பி.,யாக பதவியேற்றபோது, கேரள பெண்கள் அணியும் பாரம்பரிய புடவை அணிந்திருந்தார்.
அடுத்தபடியாக, மலையாளத்தில் சரளமாக பேச வேண்டும் என சபதம் செய்து, டில்லியில் ஒரு மலையாள ஆசிரியரிடம் டியூஷன் படித்து வருகிறார்.
மேலும், வயநாடு தொகுதியிலேயே வீடு பார்த்து, மாதத்தில் ஏழு நாட்களாவது அங்கு தங்கிஇருக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார். இதற்காக வீடு பார்க்கும் வேலை நடக்கிறது.
கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள், 'பிரியங்கா தேசிய அரசியலில் காலடி வைப்பார் என நினைத்தால்,கேரளாவை குறி வைத்து அரசியல் நடத்துகிறாரே... நாம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்...' என, புலம்புகின்றனர்.