PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

'ஒட்டுமொத்த ஆந்திராவையும், நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றிக் காட்டுவேன்...' என சபதம் செய்துள்ளார், அந்த மாநில முதல்வரும்,தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு.
இவர், 1990களின்இறுதியில், ஒருங்கிணைந்தஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப்போது, நாட்டின் மற்றமாநிலங்களை விட வளர்ச்சியில் ஆந்திரா பின்தங்கியிருந்தது.
அந்த கால கட்டத்தில் தான், உலகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப துறைஅபார வளர்ச்சி அடைந்தது.இதை சரியான வாய்ப்பாககருதிய சந்திரபாபு நாயுடு,தகவல் தொழில்நுட்ப துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஆந்திர தலைநகராக இருந்த ஹைதராபாதில், தகவல் தொழில்நுட்ப துறைக்கான அடிப்படை கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்தினார். இதன் விளைவாக, சென்னை, மும்பை, டில்லி போன்ற நகரங்களை விட, ஹைதராபாத் பல மடங்கு வளர்ச்சியை எட்டியது.
'இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் பிதாமகன்' என, சந்திரபாபு நாயுடுவை அனைவரும்பாராட்டினர். தற்போது ஹைதராபாத், தெலுங்கானாவின்தலைநகரமாகி விட்டது.
இதையடுத்து, அமராவதி, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்ப துறைக்கான வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார், சந்திரபாபு நாயுடு.
சக அரசியல்வாதிகளோ, 'இவரது முயற்சி பாராட்டத்தக்கது தான். ஆனால், அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வேறு கட்சியை சேர்ந்தவர் முதல்வரானால், இவரது திட்டங்களை ரத்து செய்து விடுவாரே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.