PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

‘இவருக்கு ஏன் இந்த வேலை...?’ என, தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசின் முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து கேள்வி எழுப்புகின்றனர், அந்த மாநில மக்கள்.
காங்., கட்சியில் இருந்தாலும், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை குறி வைத்து செயல்படாமல், சுறுசுறுப்பாக பணியாற்றி மக்களிடம் வரவேற்பை பெற்றவர், ரேவந்த் ரெட்டி. தன் சிறப்பான செயல்பாடுகளால், அனைத்து கட்சியினரின் பாராட்டுகளையும் பெற்றவர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘பா.ஜ., தலைவர்கள், ராமரை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்கின்றனர். ராமர், பணக்காரர்களின் கடவுள். சிவன், ஏழைகளின் கடவுள்...’ என்றார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சு, பா.ஜ.,வின ரை ஆவேசப்பட வைத்துள்ளது. ‘ஹிந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக ரேவந்த் ரெட்டி பேசுகிறார். எங்களுக்கு ராமரும் கடவுள் தான்; சிவனும் கடவுள் தான்.
‘ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இதுபோல் பேசுவர். ரேவந்த் ரெட்டி நன்றாகத் தானே இருந்தார்... இப்போது அவருக்கு என்ன ஆயிற்று?’ என கேள்வி எழுப்பினர்.
தெலுங்கானா மக்களோ, ‘காங்கிரஸ் கட்சியினர், சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்குவதற்காக ஹிந்து மதத்தை தாக்கி பேசுவர். ஆனால், ரேவந்த் ரெட்டியோ, ஹிந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கிறார் போலும்...’ என, கிண்டல் அடிக்கின்றனர்.
