PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

'இப்போது தான் ஒரு பிரளயமே நடந்து முடிந்துஇருக்கிறது; அதற்குள் அடுத்த பிரச்னையா...' என, கவலைப்படுகின்றனர், திருமலை திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள்.
ஆந்திராவில், முதல்வர்சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், ஏழுமலையான் கோவிலின்லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாகசந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தற்போதுஉச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இப்போது, அதே கோவிலை மையமாகவைத்து, ஆந்திரா மற்றும்அதன் அண்டை மாநிலமான தெலுங்கானா முதல்வர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்பெல்லாம் தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும்பரிந்துரை கடிதங்களை எடுத்து வருவோருக்கு, ஏழுமலையான் கோவிலில் விரைவு தரிசனம், தங்குமிடம்ஆகியவை உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
சமீபகாலமாக தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்க மறுப்பதாக, முதல்வர் ரேவந்த் ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.
'எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் தரும் பரிந்துரை கடிதங்களை ஏற்க மறுத்தால், தெலுங்கானாவில் உள்ள கோவில்களுக்கு வரும் ஆந்திர எம்.எல்.ஏ.,க்களுக்கு சிறப்பு தரிசனத்தை ரத்து செய்து விடுவோம்...' என, ரேவந்த் ரெட்டி தரப்பினர் மிரட்டுகின்றனர்.
'இந்த சின்ன பிரச்னையை, இரண்டு மாநிலங்களுக்குஇடையிலான விவகாரமாக மாற்றி விட்டனரே...' என, வருத்தப்படுகின்றனர், ஏழுமலையான் பக்தர்கள்.