தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'இவரா யோக்கிய காதலன்?'

 'இவரா யோக்கிய காதலன்?'

 'இவரா யோக்கிய காதலன்?'

1


PUBLISHED ON : செப் 25, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2026 02:42 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கட்சி மாறியதற்கு காரணம் கேட்டால், இப்படி எல்லாமா உதாரணம் கூறுவார்...?' என, பா.ஜ., - எம்.பி., ராகவ் சத்தா குறித்து கேள்வி எழுப்புகின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர், ராகவ் சத்தா. அரவிந்த் கெஜ்ரிவாலின் நிழல் என்றே, இவரை பலரும் அழைத்தனர். ஆம் ஆத்மி தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

கட்சி தாவி ஆறு மாதங்களானாலும், ராகவ் சத்தாவை ஆம் ஆத்மி கட்சியினர், 'துரோகி' என, தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பேசிய ராகவ் சத்தா, 'ஆம் ஆத்மி கட்சி, என் முன்னாள் காதலி. அந்த காதலியுடனான உறவு முறிந்து விட்டது. இப்போது, பா.ஜ., என்ற புதிய வாழ்க்கையைத் தேடி போய் விட்டேன்.

'என் பழைய காதலியால், இதை ஜீரணிக்க முடியவில்லை; தொடர்ந்து என் மீது அவதுாறு பரப்பி வருகிறார். இதற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ...?' என, கிண்டலாக கேட்டிருந்தார்.

ஆம் ஆத்மி கட்சியினரோ, 'எங்கள் கட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, இப்போது யோக்கியமான காதலன் போல் கதை விடுகிறார் ராகவ் சத்தா...' என, கடுமையாக விமர்சிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us