தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘தரம் தாழ்ந்த பிரசாரம்!’

‘தரம் தாழ்ந்த பிரசாரம்!’

‘தரம் தாழ்ந்த பிரசாரம்!’


PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டன...’ என கவலைப்படுகின்றனர், அசாம் மாநில மக்கள்.

அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நாகவுன் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக, காங்கிரஸ் கட்சியின் பிரத்யுத் என்பவர் இருந்தார். கடந்த மார்ச்சில், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்த பிரத்யுத், பா.ஜ.,வில் இணைந்தார். ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகி விட்டார்.

இதையடுத்து, நாகவுன் லோக்சபா தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுடன், அசாமில் செயல்படும் அகில இந்திய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் நிறுவனரான முன்னாள் எம்.பி., பத்ருதீன் அஜ்மலும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால், தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.,வினரை கடுமையாக விமர்சித்தார் பத்ருதீன் அஜ்மல். அவருக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘சாப்பிடுவதற்காகவே பிறந்தவர் பத்ருதீன்; அரசு பணத்தை எல்லாம் தின்றே தீர்த்து விட்டார்...’ என்றார்.

இதற்கு பதிலடியாக, ‘ஆம்; நான் பிரியாணி சாப்பிடுவதற்காகவே பிறந்தவன்...’ என்றார் பத்ருதீன். சர்மா சும்மா இருப்பாரா...? ‘விலங்குகளுக்கு பிரியாணி தான் பிடிக்கும்...’ என்றார்.

இதை பார்த்த அசாம் மக்கள், ‘இவர்களுக்கு நாகரிகமாகவே பேசத் தெரியாதா...?’ என புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us