தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்


PUBLISHED ON : அக் 04, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026 02:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அபசகுனமாக கோஷமிடுவதா?'

'நல்ல காரியம் நடக்கும்போது வந்து போராடுகின்றனரே...' என புலம்புகிறார், உத்தர பிரதேச மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச்

சேர்ந்தவருமான சந்தீப் சிங்.

இவர், உ.பி., முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான மறைந்த கல்யாண் சிங்கின் பேரன். அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நடக்கவுள்ளது; இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

சமீபத்தில், 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், லக்னோவில் உள்ள சந்தீப் சிங் வீட்டின் முன் திரண்டனர். திருமண ஏற்பாடுகளை கவனிக்க வந்திருக்கும் உறவினர்களாக இருக்குமோ என நினைத்தபோது, அவர்கள் திடீரென சந்தீப் சிங்கை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

'ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, பல ஆண்டுகளாக பணி நியமனத்துக்கு காத்திருக்கிறோம். கல்வித் துறைக்கு நீங்கள் தானே அமைச்சர்; எங்களை பணி நியமனம் செய்யுங்கள். உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. எங்களுக்கு திருமணமாக வேண்டுமானால், வேலை வேண்டும். வேலை இல்லாமல் பிரம்மச்சாரிகளாகவே நாங்கள் சாக வேண்டுமா...?' என, அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த கோஷத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தீப் சிங், 'விரைவில் பணி நியமனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்...' என, அவர்களை சமாதானப்படுத்தி

அனுப்பி வைத்தார்.

பின், 'நல்ல காரியம் நடக்கவிருக்கும்போது இப்படி அபசகுனமாக கோஷம் போடுகின்றனரே...' என,

நண்பர்களிடம் புலம்பி தீர்த்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us