தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/எய்தவர் மீதே பாயும் அம்பு!

எய்தவர் மீதே பாயும் அம்பு!

எய்தவர் மீதே பாயும் அம்பு!


PUBLISHED ON : நவ 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘அவர் எய்த அம்பு, அவர் மீதே பாயத் தொடங்கி விட்டது...’ என, மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமியை பார்த்து கிண்டலடிக்கின்றனர், கர்நாடக காங்கிரஸ் கட்சியினர்.

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மத்தியில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் அங்கம் வகிக்கிறது. அதனால் குமாரசாமி, மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக உள்ளார்.

ஆனாலும், மாநில அரசியலில் தான், அவருக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. சமீபத்தில், கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையாவை அவமதிக்கும் வகையில், ஒரு வீடியோ வெளியானது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் சிலரை கைது செய்தனர். இதை கண்டித்து, பெங்களூரில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், குமாரசாமி போராட்டம் நடத்தினார்.

போலீசாரோ, ‘இப்போதைக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகளை தான் கைது செய்துள்ளோம். ஆனால், இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தால், குமாரசாமிக்கே ஆபத்து ஏற்படும்.

‘வீடியோ வெளியிட பயன்படுத்திய மொபைல் போன், டில்லியில் வாங்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள குமாரசாமியின் வீட்டில் தான் அந்த போன், ‘டெலிவரி’ செய்யப்பட்டுள்ளது...’ என்கின்றனர்.

இதைக் கேட்ட குமாரசாமி தரப்பினர், ‘முதலுக்கே மோசம் வந்து விடும் போலிருக்கிறதே...’ என, தற்போது அடக்கி வாசிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us