தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/‘ஆட்டம் ஆரம்பம்!’

‘ஆட்டம் ஆரம்பம்!’

‘ஆட்டம் ஆரம்பம்!’


PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள், அவரை பாடாய் படுத்துகின்றனரே...’ என, கேரள மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சதீசன் குறித்து பரிதாபத்துடன் பேசுகின்றனர், அந்த மாநில மக்கள்.

கேரளாவில், கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைத் தது. முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.

அதிலும் வேணுகோபாலுக்கு, காங்கிரஸ் மேலிட தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் மிகவும் நெருக்கம் என்பதால், முதல்வர் பதவியை கைப்பற்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனாலும், கேரள காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவு இருந்ததால், சதீசனுக்கு முதல்வர் பதவி கிடைத்தது. தற்போது அவர் முதல்வர் பதவியில் அமர்ந்து ஆறு மாதங்களான நிலையில், அவரது அதிருப்தியாளர்கள், ‘உள்ளடி’ வேலையை தொடங்கி விட்டனர்.

சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘எங்களை கலந்தாலோசிக்காமல் முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கிறீர்கள்... அப்புறம் நாங்கள் எதற்கு அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும்?’ என முதல்வர் சதீசனிடம் சில அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி, அவரை அதிர வைத்தனர்.

இதனால் கலக்கம் அடைந்துள்ள சதீசன், ‘டில்லி மேலிடத்தில் செல்வாக்கு உள்ளவர்கள், தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர்...’ என புலம்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us