தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ 'மீசையில் மண் ஒட்டவில்லை!'

 'மீசையில் மண் ஒட்டவில்லை!'

 'மீசையில் மண் ஒட்டவில்லை!'


PUBLISHED ON : ஆக 17, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2026 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாவம்; ரொம்பவே வெறுத்துப் போய் பேசியிருக்கிறார்...' என, கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா குறித்து பேசுகின்றனர், அந்த மாநில மக்கள்.

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இவருக்கு முன் முதல்வராக இருந்த சித்தராமையா, காங்., மேலிடத்தால் வலுக் கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.

தற்போது முதல்வர் பதவியில் இல்லாததால், குடும்பத்தினர் மற்றும் பழைய நண்பர் களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார், சித்த ராமையா.

சமீபத்தில் தன் நண்பர்களிடம் பேசிய அவர், 'எனக்கும், 80 வயதாகி விட்டது; 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்து வருகிறேன். நான், அரசியலுக்கு வந்த காலத்தில் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்களுக்கு, பொதுமக்களே செலவுக்கு பணம் கொடுப்பர். இப்போது, நிலைமை மாறி விட்டது. ஓட்டுகளை வாங்க, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

'இந்த அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான், தேர்தல் அரசியலில் இருந்து விலகி விட்டேன்; இனி தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்...' என்றார்.

சிவகுமார் ஆதரவாளர்களோ, 'சித்தராமையாவுக்கு இப்போது மக்களிடம் செல்வாக்கு இல்லை. கட்சி மேலிடமும் அவரை ஒதுக்கி விட்டது. அதனால், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் கதை விடுகிறார்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us