
'நாம் அமைதியாக இருந்தாலும், நம்மை சுற்றி இருப்பவர்கள் அதை சீர்குலைத்து விடுகின்ற னரே...' என கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்களை ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களா க அடையாளப்படுத்திக் கொள்வர். ஆனால், பொது வாழ்வுக்கு வந்து, முதல்வர் போன்ற முக்கியமான பதவிகளை வகிக்கும்போது, இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வது அவர்க ளுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
அதனால், இது போன்ற விஷயங்களில் நடுநிலையாக இருப்பது போல் காட்டிக் கொள்வர். பினராயி விஜயனும் அப்படித் தான். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது.
சபரிமலையில் சமீபத்தில் சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமம் என்ற மாநாட்டை, கேரள அரசு நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈழவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், 'இடதுசாரிகளில், 90 சதவீதம் பேர் அய்யப்ப பக்தர்கள் தான். முதல்வரும் கூட ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர் தான்...' என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய கம்யூ., தலைவர் ஒருவர், 'கம்யூனிச கொள்கையில் ஊறி திளைத்தவர், முதல்வர் பினராயி விஜயன். அவரை வேறு யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது...' என்றார்.
மேடையில் இருந்த பினராயி விஜயனோ, 'வாயை திறக்காமல் அமைதியாக இருந்தாலும், நம்மை வம்பில் சிக்க வைக்கின்றனரே...' என, தர்மசங்கடத்தில் நெளிந்தார்.