PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

'உட்கட்சி குழப்பங்களை சரி செய்வதிலேயே காலம் கடந்து விடும் போலிருக்கிறது...' என, கவலைப் படு கின்றனர், கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, முதல் வர் சித்தராமையா தலைமை யில் ஒரு கோஷ்டியாகவும், துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
சி த்தராமையாவிடம் இருந்து முதல்வர் பத வியை கைப்பற்ற, சிவகுமார் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். சமீபத்தில், கர்நாடகா முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்த விவகாரம், சிவகுமாருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதனால், அவர்களுக்கு சலுகைகள் அதிகரிக்கப்பட்டால், அந்த பிரிவினரிடையே சித்த ராமையாவுக்கு செல்வாக்கு அதிகரித்து விடுமோ என்ற கலக்கம், சிவகுமாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 'ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவையற்ற கேள்விகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, உங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் இருக்கிறது; ஆடு, மாடுகள் இருக்கின்றன என்பது போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும்...' என கூறியுள்ளார் , சிவகுமார்.
சித்தராமையா ஆதரவாளர்களோ, 'முதல்வர் பதவி என்பது வெறும் கனவாகவே போய்விடுமோ என, சிவகுமார் பயப்படுகிறார் போலிருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.