PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுமையான புத்தாண்டு
 
வருகிற புத்தாண்டு கணித ஆர்வலர்களுக்கு பிடித்தமானது. ஏனெனில் 2025 என்பது 45 என்ற எண்ணின் வர்க்கம். அதாவது ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கினால் கிடைப்பது வர்க்கம் (ஸ்கொயர்). கடைசியாக 89 ஆண்டுக்கு முன் இதுபோல 1936 (44 எண்) புத்தாண்டு வந்தது. அதற்கு முன் 1849 (43), 1764 (42), 1681 (41) ஆண்டுகளில் வந்திருந்தது. அடுத்த  வர்க்க எண் 2116 (46) புத்தாண்டு என்பது 91 ஆண்டுக்குப்பின் தான் வரும். பொதுவாக ஒருவர் ஒரு வர்க்க எண் புத்தாண்டை  தான் பார்க்க முடியும். சிலருக்கு  இரண்டு வர்க்க எண் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.

